வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பரமக்குடி தாலுகா அலுவலகம் முன்பு வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-08-17 19:02 GMT
பரமக்குடி,

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் பரமக்குடி வட்ட கிளையின் சார்பில் பரமக்குடி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தாசில்தார் தமிம்ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் குமரன் அனைவரையும் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தின்போது புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்ட காலத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் துணை தாசில்தார் ரங்கராஜன் உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்