குமரலிங்கம் பகுதியில் புதர் மண்டிக் கிடக்கும் நீர்வழித்தடங்களை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரலிங்கம் பகுதியில் புதர் மண்டிக் கிடக்கும் நீர்வழித்தடங்களை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-08-17 17:10 GMT
போடிப்பட்டி, 
குமரலிங்கம் பகுதியில் புதர் மண்டிக் கிடக்கும் நீர்வழித்தடங்களை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைநீர் சேமிப்பு
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
பூமியின் மேற்பரப்பில் 71 சதவீதம் தண்ணீர் இருந்தாலும் அதில் மனிதர்களால் பயன்படுத்தக்கூடிய தன்மையுடன் வெறும் 3.5% மட்டுமே உள்ளது மற்றதெல்லாம் அதிக உப்புத்தன்மை கொண்ட கடல் நீராகவே உள்ளது. எனவே தண்ணீரை சேமிப்பதும், பாதுகாப்பதும் மிகவும் அவசியமாகிறது. மிகவும் சுத்தமானதாக கருதப்படும் மழைநீரை சேமிப்பதன் மூலம் நமது தண்ணீர்த் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும்.அத்துடன் மழைநீர் சேமிப்பால் நிலத்தடி நீர் மேம்படுவதால் ஆண்டு முழுவதும் தடையில்லாமல் நீர் பெற முடியும். இதற்கென நமது முன்னோர் ஆறுகள், ஓடைகள் உள்ளிட்ட நீர்வழித்தடங்களை முறையாக பராமரித்ததுடன், ஊரணி, குளம், ஏரி, அணைக்கட்டுகள் போன்ற நீராதாரங்களை உருவாக்கி அவற்றில் மழைநீரை சேமித்தனர்.
வீணாகும் தண்ணீர்
தற்போது நீர்வழித் தடங்கள் மற்றும் நீராதாரங்கள் பராமரிப்பில் காட்டப்படும் அலட்சியம் வருங்காலத்தில் மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறைக்கு நம்மை இட்டுச் செல்லும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு பருவமழைக் காலத்துக்கு முன்பும் நீர் வழித் தடங்கள் மற்றும் நீராதாரங்களை தூர் வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.அந்தவகையில் குமரலிங்கம் பகுதியிலுள்ள மழைநீர் ஓடை தற்போது புதர்கள் மண்டி இருக்குமிடம் தெரியாத நிலையில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த ஓடையில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும். அத்துடன் இந்த ஓடையில் பல இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் மாசுபடுவதுடன் பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கும் காரணமாகிறது. மேலும் பெருமளவு தண்ணீர் வீணாவதுடன் சில நேரங்களில் அருகிலுள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியிலுள்ள மழைநீர் ஓடைகள் மற்றும் சாலையோர நீர்வழித் தடங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்