நிலக்கோட்ைட அருகே தலைக்குப்புற கவிழ்ந்த ஆர்.டி.ஓ. ஜீப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
நிலக்கோட்ைட அருகே ஆர்.டி.ஓ. ஜீப் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் ஆர்.டி.ஓ.வாக இருப்பவர் காசி செல்வி. இவர் தனது உதவியாளர் ஜான்சன் மற்றும் ஜீப் டிரைவர் சக்திவேலுடன் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு ஆய்வு பணிக்காக திண்டுக்கல்லில் இருந்து காலை 11 மணி அளவில் செம்பட்டி வழியாக சென்று கொண்டிருந்தார். மைக்கேல்பாளையம் அருகே உள்ள ரைஸ் மில் பகுதியில் ஜீப் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒட்டுபட்டியை சேர்ந்த விவசாயியான கிருஷ்ணன் என்பவர் நெல் அரைப்பதற்காக தனது மோட்டார்சைக்கிளை ரைஸ்மில் நோக்கி திருப்பினார்.
இதை சற்றும் எதிர்பாராத டிரைவர் சக்திவேல் உடனடியாக பிரேக் பிடித்தார். இதில் ஜீப் நிலைதடுமாறி ரோட்டோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. எனினும் ஜீப்பில் இருந்த ஆர்.டி.ஓ. காசிசெல்வி, உதவியாளர் ஜான்சன், ஜீப் டிரைவர் சக்திவேல் மற்றும் விவசாயி கிருஷ்ணன் ஆகியோர் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.