4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூரில் உள்ள தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார்.
வேளாண்மைத்துறை அமைச்சக பணியாளர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில துணை தலைவர் யோகராஜ், நெடுஞ்சாலைத்துறை மாநில செயலாளர் சீனிவாசன், பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திரளான அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண் டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் விடுப்பை வழங்கவேண்டும், சத்துணவு அங்கன்வாடி, செவிலியர், ஊர்ப்புற நூலகர்கள், வருவாய் கிராம ஊழியர்கள் ஆகியோருக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிபவர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற 4 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அதேபோன்று நிலுவையில் உள்ள 27 மாத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் எதிரே நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், அரசு ஊழியர்கள் சங்க வட்ட செயலாளர் முனுசாமி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி துறை மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.