மது விற்ற 28 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் அனுமதியின்றி மதுவிற்பனை நடக்கிறதா என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மாவட்டம் முழுவதும் 19 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி, சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 321 மதுபாட்டில்களும், ரூ.5 ஆயிரத்து 50 ரொக்கப்பணம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.