வருவாய்த்துறை ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து நேற்று பணியாற்றினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை அட்டை அணிந்து நேற்று பணியாற்றினர்.
கோரிக்கை அட்டை
மத்திய அரசு 1.7.21 முதல் வழங்கிய அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்தபடி வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று பணியாற்றினர்.
400 பேர்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் பணியாற்றி வரும் சுமார் 400 அலுவலர்கள் கோரிக்கை அட்டையை அணிந்து இருந்தனர்.
தொடர்ந்து இன்றும் (செவ்வாய்க்கிழமை) கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதன்பிறகு அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் முடிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.