வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு
வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு கொடுக்கப்பட்டது.
வாடிப்பட்டி,
மதுரை மேற்கு மாவட்ட தமிழ்நாடு வண்ணார் பேரவை சார்பாக வீட்டுமனைவேண்டி கலெக்டர் அனீஷ்சேகரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.- மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, சோழவந்தான், அவனியாபுரம், வலையங்குளம், ஜெயந்திபுரம், திருநகர், தத்தனேரி, சந்திரலேகாநகர், கல்மேடு, ஆண்டார்கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் வண்ணார்சமூகத்தை சேர்ந்தவர்கள் வீடுகள் இன்றி கண்மாய், குளம், ஏரி, ஆறு பகுதிகளில் தொழில்செய்துகொண்டு குடிசைகள் அமைத்து வசித்து வருகிறோம். எனவே ஏழ்மைநிலையில் வாழ்ந்துவரும் எங்களுக்கு தமிழகஅரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா அந்தந்த பகுதிகளில் வழங்கவேண்டும். இவ்வாறுஅதில்கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை கலெக்டரிடம் மாநில தலைவர் செல்வராஜ், மாவட்டசெயலாளர் ராஜேந்திரன், ஆசிரியர் குருசாமி, குமரேசன் உள்ளிட்டோர் வழங்கினர்.