அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர்தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி செல்லம்பட்டி மற்றும் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாகவும் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் அய்யங்காளை, வட்ட கிளை இணைச்செயலாளர் சிவமணி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அன்பழகன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர்கள் ஜெயராஜ், மனோகரன் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.