துணிக்கடையில் திருட்டு

துணிக்கடையில் திருட்டு

Update: 2021-08-16 19:43 GMT
பரமக்குடி
பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் பாசி பவளக்காரர் தெருவைச் சேர்ந்தவர் சிக்கந்தர் துல்கருணை (வயது 27). இவர் பார்த்திபனூரில் துணி கடை வைத்துள்ளார். இவரது கடையின் பூட்டு உடைத்து உள்ளே இருந்த துணிகள் மற்றும் செல்போன், ஸ்பீக்கர் உள்பட பல பொருட்கள் திருடு போய் உள்ளது. இதுகுறித்து சிக்கந்தர் பார்த்திபனூர் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுதா வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்