மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி தந்தை மகள் சாவு

வாத்தலை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் தந்தை-மகள் உயிரிழந்தனர். அவருடைய மனைவியும், மகனும் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-08-16 19:41 GMT
திருச்சி
கொள்ளிடம் டோல்கேட்
பஸ் மோதல்
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள வெனிஸ் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). கூலி தொழிலாளியான இவர் வாத்தலை அருகே நெ.2 கரியமாணிக்கம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனைவி மலர்விழி (27), மகன் தர்ஷன் (6), மகள் தர்ஷினி (4) ஆகியோரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
 கிளியநல்லூர் அருகே திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த 4 பேரும் பலத்த காயமடைந்தனர்.
2 பேர் சாவு
 இதுகுறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டனும், வர்ஷினியும் உயிரிழந்தனர். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்