வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னமராவதி:
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை அட்டை அணிந்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார். பொன்னமராவதி வட்டாட்சியர் ஜெயபாரதி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு 01.07.2021 முதலாக ஒன்றிய அரசு வழங்கிய அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு உடனே வழங்கிட வேண்டும். வருவாய்த் துறை அலுவலர்கள் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை அட்டை அணிந்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.