ுதந்திர தினத்தன்று மது, சாராயம் விற்ற 29 பேர் கைது

மது, சாராயம் விற்ற 29 பேர் கைது

Update: 2021-08-16 17:17 GMT
வேலூர்

தமிழகம் முழுவதும் 75-வது சுதந்திர தினத்தையொட்டி நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் மற்றும் சாராயம் விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார். 

அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

 இதில், மது, சாராயம் விற்றதாக 29 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 199 லிட்டர் சாராயம், 131 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்