கோவை
சுதந்திர தின விழாவையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூட உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் உள்ள மயானம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தர்மன் (வயது 32) என்பவரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் ஆர்.எஸ்.புரம், 80 அடி ரோடு, சிங்காநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.