சாராயம் மதுபாட்டில் விற்பனை 3 பேர் கைது

சாராயம் மதுபாட்டில் விற்பனை 3 பேர் கைது

Update: 2021-08-16 15:56 GMT
ரிஷிவந்தியம்

பகண்டை கூட்டுரோடு போலீஸ்  சப்-இன்ஸ்பெக்டர் சபரிமலை மற்றும் போலீசார் தொண்டனந்தல் பகுதியில் தீவிரமாக ரோந்து சென்றனர். அப்போது மேட்டுத்தெரு அருகே விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் சாராயம் வைத்திருந்த அகரக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த சரவணன்(32) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்துடன் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் அதே தெருவில் வீட்டில் வைத்து மதுபாட்டில் விற்ற ரீட்டா மேரி(35) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 6 மதுபாட்டில் மற்றும் சாராயம் விற்ற மணி(32) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 9 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்