கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-08-16 13:42 GMT
தேனி:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி உயர்வு, சரண்டர் விடுப்பு மீண்டும் வழங்குதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் போன்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நீண்டகால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும், பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடாததால் ஏமாற்றம் அடைந்துள்ளதை வெளிக்காட்டும் வகையிலும் தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தேனி மாவட்டத்தில் தேனி பெருந்திட்ட வளாகம், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம், தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கடமலைக்குண்டு, போடி, கம்பம் ஆகிய 8 இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி பெருந்திட்ட வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டக்கிளை தலைவர் மாரிச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமகிருட்டிணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். மற்ற இடங்களில் மாவட்ட, வட்டக்கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்