பா.ஜ.க. மாவட்ட அலுவலகத்தை அகில இந்திய தலைவர் திறக்கிறார்
வாணியம்பாடியில் கட்டப்பட்டு வரும் பா.ஜ.க. மாவட்ட அலுவலகத்தை, அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா திறக்க உள்ளதாக, கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் கட்டப்பட்டு வரும் பா.ஜ.க. மாவட்ட அலுவலகத்தை, அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டா திறக்க உள்ளதாக, கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மனுக்களை ெபற்றார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ஜ.க. அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. புதிய அலுவலகம் கட்டும் பணியை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு திடீரெனப் பார்ைவயிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக வாணியம்பாடிக்கு வருகை தந்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு, மாவட்ட பா.ஜ.க. சார்பில் பைபாஸ் ரோட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆய்வு மேற்கொள்ள வந்த அவரிடம் கட்சியினர் வழங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார்.
திறப்பு விழா
அப்போது அண்ணாமலை கூறுகையில், கட்சி அலுவலக கட்டிடம் கட்டுமானப் பணிகள் முடிந்ததும் கட்சியின் அகில இந்திய தலைவர் ெஜ.பி.நட்டா தலைமையில் விரைவில் திறப்பு விழா நடத்தப்பட உள்ளது, என்றார்.
ஆய்வின்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.