சுதந்திர தின விழா தேசிய கொடியை ஏற்றி வைத்து கலெக்டர் மரியாதை
காஞ்சீபுரம மாவட்டத்தில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் 75-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் துறை மற்றும் ஊர்காவல் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் துறை, ஊரக வளர்ச்சித்துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை போன்றவற்றில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக இருந்து சிறப்பாக பணியாற்றியமைக்காக பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
பின்னர் அவர் மொத்தம் 76 பயனாளிகளுக்கு ரூ.49,33,657 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. எம்.சத்தியபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ஆர்.பன்னீர்செல்வம், மண்டல அறநிலையத்துறை உயர் அதிகாரி ஜெயராமன், காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி ராஜலட்சுமி, மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இனிப்புடன் உணவு பொட்டலங்கள்
சுதந்திர தின விழாவையொட்டி காஞ்சீபுரம் மண்டலத்தில் உள்ள 35 கோவில்களில் ஏழைகளுக்கு இனிப்புடன் கூடிய உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டதாக மண்டல அறநிலையத்துறை உயர் அதிகாரி ஜெயராமன் தெரிவித்தார். காஞ்சீபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் கோவில் செயல் அலுவலர்கள் குமரன், என்.தியாகராஜன் ஆகியோர் இனிப்புடன் கூடிய உணவு பொட்டலங்களை வழங்கினர்.
காஞ்சீபுரம் பெருநகராட்சி அலுவலகத்தில், நகராட்சி ஆணையர் லட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இதில் நகராட்சி என்ஜினியர் ஆனந்த ஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில், வங்கி சேர்மனும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான வாலாஜாபாத் பா.கணேசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தில் மேலாளர் முரளி தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
இதேபோல் காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
வாலாஜாபாத்
சுதந்திர தின விழாவையொட்டி வாலாஜாபாத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் தேசிய கொடியை ஏற்றினார்.
வாலாஜாபாத் தாசில்தார்் அலுவலகத்தில் தாசில்தார் ராதாகிருஷ்ணனும் வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் பிரேமாவும் தேசிய கொடியை ஏற்றி வைத்து அலுவலக ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்கள்.
படப்பை
குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தேசிய கொடியை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் ஏற்றி வைத்தார். அப்போது அவருடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) பழனி இருந்தார். படப்பை ஊராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஊராட்சி செயலர் முகம்மது ஆரிப் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.
மணிமங்கலம், மாடம்பாக்கம், ஆதனூர் ஊராட்சிகளில் முறையே ஊராட்சி செயலர்கள் கோபால், மொய்தீன், இதயராஜ் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்கள்.