மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெயிண்டர் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெயிண்டர் பலி.

Update: 2021-08-16 03:11 GMT
பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த மேல்மனம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 50). பெயிண்டர். அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் சுதாகர் (41). நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்பாடு கொடுத்துவிட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது இவர்களது மோட்டார்சைக்கிளும், எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த தேவேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த சுதாகர், அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்