ஆடு திருடிய 3 பேர் கைது

நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் ஆடு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-15 20:53 GMT
நாகமலைபுதுக்கோட்டை,

நாகமலைபுதுக்கோட்டை சர்வோதயா நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 42). இவர் அப்பகுதியில் ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார். ஆடுகளை வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் அடைப்பது வழக்கம். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் ஆடுகளை கொட்டகையில் அடைத்து வைத்து விட்டு தூங்கச் சென்று விட்டார். நள்ளிரவில் எழுந்து வந்து பார்த்தபோது அங்கு கட்டியிருந்த 3 ஆடுகளை காணவில்லை அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்காததால் நாகமலைபுதுக்கோட்டை போலீசில் முத்துலட்சுமி புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் ஆடுகளை திருடியதாக நாகராஜன் (27) மற்றும் 17 வயதான 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்