வடக்கன்குளம் வட்டார பகுதியில் நாளை மின்தடை
வடக்கன்குளம் வட்டார பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
வடக்கன்குளம்:
வடக்கன்குளம் பெருங்குடி துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் குமாரபுரம், புதியம்புத்தூர், மதகநேரி, மாறநாடார் குடியிருப்பு, செம்பிகுளம், பிள்ளையார் குடியிருப்பு, யாக்கோபுரம், சவுந்தரலிங்கபுரம் மற்றும் காற்றாலை பண்ணைகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை, வடக்கன்குளம் காற்றாலை மின் பண்ணை குழும உதவி செயற்பொறியாளர் ஜான் பிரிட்டோ தெரிவித்துள்ளார்.