மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

Update: 2021-08-15 20:31 GMT
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் பஸ் நிலைய 4 ரோடு பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்செங்கோடு சிறப்பு மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு ஒருவர் பையில் மதுபாட்டில்கள் வைத்து விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த வடிவேல் (வயது 37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 37 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
========

மேலும் செய்திகள்