வியாபாரி வீட்டில் நகை திருட்டு
சுத்தமல்லியில் வியாபாரி வீட்டில் நகை திருடு போனது.
பேட்டை:
சுத்தமல்லியை அடுத்த நரசிங்கநல்லூர் தீன் நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி மனைவி ஜமுனாராணி (வயது 45). தங்கபாண்டி தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டில் பீரோவில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது. இதுகுறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.