கட்டிட தொழிலாளி தவறி விழுந்து சாவு

கட்டிட தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தார்.

Update: 2021-08-15 19:58 GMT
திருச்சி
தா.பேட்டை
துறையூர் தாலுகா ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 55). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று அதே பகுதியில் ஆண்டி என்பவரது வீட்டின் வெளிப்புறத்தில் சாரத்தில் நின்று வேலை பார்த்த போது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து ஜம்புநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்