பெண்ணை மிரட்டியவர் கைது

சிவகாசியில் பெண்ணை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-15 19:38 GMT
சிவகாசி, 
சிவகாசி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நடத்தி வந்த கடைக்கு செல்வராஜ் (வயது 27) என்பவர் தனக்கு ரூ.50 ஆயிரம் தரவில்லை என்றால் உங்களின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக கடிதம் எழுதி அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து அந்த பெண், சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்