மாட்டு வண்டியில் மணல் திருடிய 2 பேர் கைது
மாட்டு வண்டியில் மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்
கரூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் தீனதயாளன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அமராவதி ஆற்றுப்பகுதியில் மாட்டு வண்டியில் மணல் திருடிய ஆத்தூரை சேர்ந்த செல்வராஜ் (வயது 51), தயாநிதி (40) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.