மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

Update: 2021-08-15 18:08 GMT
ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விசாரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 47), கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் புதியதாக கட்டி வரும் கட்டிடத்திற்கு மாடியிலிருந்து முருகன் பைப் மூலம் தண்ணீர் பிடித்துள்ளார். அப்போது கால் தவறி கீழே விழுந்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 
இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்