கச்சிராயப்பாளையம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது

கச்சிராயப்பாளையம் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது பாலித்தீன் பை கொடுத்த கடைக்கும் சீல் வைப்பு

Update: 2021-08-15 17:30 GMT

கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள எடுத்தவாய்நத்தம் பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி ஆகியோர் எடுத்தவாய்நத்தம் பகுதியில் நடத்திய சாராய வேட்டையின்போது அங்கு சாராயம் விற்பனை செய்து வந்த சீனிவாசன் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை செய்தனர்.  அப்போது அவர் தான் கூலிக்காக சாராயம் விற்பனை செய்வதாகவும், புதுக்குட்டை பகுதியை சேர்ந்த பெரியசாமி(40) என்பவர் தன்னை சாராயம் விற்க சொன்னதாகவும் வாக்குமூலம் அளித்தார்.  சீனிவாசன் கொடுத்த தகவலின் பேரில் பெரியசாமியை போலீசார் கைது செய்தனர். பின்னர் இவரிடம் நடத்திய விசாரணையில் கல்வராயன்மலை மொட்டையனூர் கிராமத்தைச் சார்ந்த கோவிந்தன் விற்பனைக்காக சாராயம் கொடுத்ததும், கச்சிராயப்பாளையம் பகுதியில் உள்ள கடையில் பாலீத்தீன் பைகளை வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். மேலும் வருவாய்துறையினர் உதவியோடு கச்சிராயப்பாளையம் பகுதியில் உள்ள குறிப்பிட்ட கடையயும் போலீசார் சீல் வைத்தனர். 

மேலும் செய்திகள்