பொள்ளாச்சி
நாடு முழுவதும் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவிற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சப்-கலெக்டர் இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் யோகா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தணிகவேல், தாசில்தார்கள் சசிரேகா, விஜயகுமார், மண்டல துணை தாசில்தார் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் தன்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று தாலுகா அலுவலகத்தில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தணிகவேல் தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார்.
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் கமிஷனர் தாணுமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து அரசு உத்தரவின்படி கடந்த 20 ஆண்டுகளாக விபத்து இல்லாமல் சிறப்பாக பணியாற்றிய டிரைவர்களுக்கு 4 கிராம் எடையுள்ள தங்க பதக்கத்தை அவர் வழங்கினார். விழாவில் கலந்துகொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் லட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் துணை தலைவர் சண்முக சுந்தரம், ஆணையாளர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் விஜயராணி ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஆணையாளர் மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் நாகராணி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் துணை தலைவர் துரைசாமி, ஆணையாளர் கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவன் திவாகருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் கணேசன், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆனைமலையில் உள்ள பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்தில் வனச்சரகர் புகழேந்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
பொள்ளாச்சியில் கேரம் போர்டு கிளப் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள், குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது இதில் காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை பிரிவு செயலாளர் பஞ்சலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பொள்ளாச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை அலுவலகத்தில் நடந்த விழாவில் தலைவர் வெள்ளை நடராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஆனை மலை கிளை நூலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவுக்கு வாசகர் வட்ட தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். நூலகர் மீனாக்குமாரி தேசிய கொடியேற்றி வைத்தார். ஆனைமலை பேரூராட்சி செயலர் உமா ராணி இனிப்பு வழங்கினார்.
கிணத்துக்கடவு தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் சசிரேகா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார்.விழாவில் தலைமையிடத்துதுணை தாசில்தார் குமரிஅனந்தன், மண்டலதுணை தாசில்தார் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.