எட்டயபுரத்தில் பள்ளி மாணவர் கைது

எட்டயபுரத்தில் பள்ளி மாணவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-08-15 14:45 GMT
எட்டயபுரம்:
எட்டயபுரம் காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த  பள்ளி மாணவர் ஒருவர் நேற்று ஒரு குறிப்பிட்ட சமுதாயத் தலைவரை பற்றி இழிவுபடுத்தியும், இருவேறு சமுதாயங்களுக்கிடையே வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ ஒன்றை தனது வாட்ஸ் ஆப் மூலம் குழுக்களில் பரப்பியுள்ளார். இதுகுறித்து எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், முருகன் ஆகியோர் அடங்கிய போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்