தொட்டியில் நிரம்பி வழியும் குப்பைகள்
தொட்டியில் நிரம்பி வழியும் குப்பைகள்
குன்னத்தூர்,
குன்னத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இங்குள்ள 14வது வார்டில் பிரசித்தி பெற்ற குன்றபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலில் அருள்பலிக்கும் சிவன் மேற்கு பார்த்த நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை, பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி, பைரவர் பூஜை போன்ற விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இக்கோயிலுக்கு வரும் வீதியில் பேரூராட்சி சார்பாக இரண்டு குப்பைத்தொட்டி வைத்துள்ளார்கள். இரண்டு குப்பை தொட்டியிலும் குப்பை நிரம்பி ரோட்டில் பரவிக்கிடக்கிறது. இதை பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் துர்நாற்றம் வீசி சுகாதார சீ்ர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. . ஆகவே பேரூராட்சி அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.