குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Update: 2021-08-14 21:44 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவில், வடசேரி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 24). இவர் மீது கோட்டார், ஈத்தாமொழி மற்றும் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை மிரட்டல், அடிதடி என பல வழக்குகள் உள்ளது. தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி ரஞ்சித் குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை கோட்டார் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்