மேலூர் அருகே உள்ள ஆண்டிபட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 45).தொழிலாளி. இவருக்கும் கொட்டகுடியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் கண்ணன் வீட்டில் இருந்த போது மர்ம கும்பல் ஒன்று புகுந்து அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் படுகாயமடைந்த கண்ணன் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய மேலூர் போலீசார் ஆண்டிபட்டியை சேர்ந்த பிரபா மற்றும் முனிச்சாமி உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.