பஸ்சில் 3 பவுன் தங்க சங்கிலி திருட்டு

பஸ்சில் 3 பவுன் தங்க சங்கிலி திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-08-14 17:18 GMT
ராமநாதபுரம், 
மானாமதுரை காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சரவணன். இவர் தனது மனைவி மினர்வா (வயது29), குழந்தைகள் உள்ளிட்டோருடன் மனைவியின் சொந்தஊரான ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்திற்கு வருவதற்காக பஸ்சில் ராமநாதபுரம் வந்துள்ளார். புதிய பஸ்நிலையத்தில் இருந்து ஊருக்கு செல்ல டவுன்பஸ்சில் சென்றபோது மினர்வா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து மினர்வா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்