திண்டுக்கல்லில் பா.ஜனதா இளைஞர் அணியினர் ஜெய்ஹிந்த் முழக்கம்
திண்டுக்கல்லில் பா.ஜனதா இளைஞர் அணியினர் ஜெய்ஹிந்த் முழக்கமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திண்டுக்கல்:
சுதந்திர தினத்தையொட்டி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜனதா இளைஞர் அணி சார்பில், திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஜெய்ஹிந்த் முழக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு இளைஞர் அணி மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். பொருளாளர் சுந்தர்ராஜா வரவேற்றார்.
இதில் பா.ஜனதா கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் கலந்து கொண்டு ஜெய்ஹிந்த் முழக்கம், சுதந்திர போராட்டம், சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்து பேசினார்.
இதையடுத்து பா.ஜனதாவினர் அனைவரும் ஜெய்ஹிந்த் என்று கூறி முழக்கமிட்டனர். இதில் நகர இளைஞர் அணி தலைவர் சபரி, ஒன்றிய தலைவர்கள் ராஜ்திலக், விக்னேஷ், சூர்யகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.