சுதந்திர தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடல் கலெக்டர் உத்தரவு

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடல் கலெக்டர் உத்தரவு

Update: 2021-08-13 22:29 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு விற்பனை இல்லாத தினமாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மதுக்கடைகள் நாளை மூடப்படுகிறது. மேலும் ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பார்கள், பார்களுக்கு உரிமம் பெற்றுள்ள ஓட்டல்கள் என அனைத்தும் மூடப்படும். அரசு உத்தரவை மீறி மதுக்கடைகளை திறந்தாலோ, அல்லது மது விற்பனையில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்