சோழவந்தான் அருகே தச்சம்முத்து கிராமத்தை சேர்ந்த சந்திரன் என்பவர் வீட்டிற்கு சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அந்த வழியாக இரும்பாடி கிராமத்தை சேர்ந்த முனீஸ்வரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.இதுகுறித்து சந்திரன் சோழவந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.