கிணற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி
அருப்புக்கோட்டை அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலைக்கு முயன்றார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமசாமிபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது24). கட்டிட தொழிலாளி. இவருக்கும் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த நாகமணி (23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் சமீபகாலமாக இவர்கள் இருவருக்கும் இடையயே அடிக்கடி பிரச்சினை நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. அப்போது நாகமணி திடிரென ஓடிச்சென்று வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அருப்புக்கோட்டை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் அப்பகுதி மக்கள் உதவியுடன் போராடி நாகமணியை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனயில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை நடத்தி வருகிறார்.