நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்த மர்ம ஆசாமியை போலீசார் விசாரணை நடத்தினர்.
வெள்ளியணை
வெள்ளியணை அருகே உள்ள கல்லுமடை காலனியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருடைய மனைவி வள்ளியம்மாள் (வயது 43). இவர் பள்ளபட்டி அரசு மருத்துவமனையில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் பஸ் ஏறுவதற்காக வீட்டிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரெயில்வே மேம்பால பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர் வள்ளியம்மாள் கழுத்திலிருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.