குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு

வாணியம்பாடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2021-08-13 18:29 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜிநகர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று திடீெரன புகுந்தது. 

அதைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் ஓடி வந்து மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்தனர். 

அங்கிருந்தவர்கள் வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினரிடம் மலைப்பாம்பை இளைஞர்கள் ஒப்படைத்தனர். மலைப்பாம்பை பெற்ற வனத்துறையினர் கோணிப்பையில் போட்டு கட்டி எடுத்துச்சென்று அடர்ந்த காட்டில் விட்டனர்.

மேலும் செய்திகள்