வால்பாறையில் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை

வால்பாறையில் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை

Update: 2021-08-13 18:18 GMT
வால்பாறையில் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை
வால்பாறை

வால்பாறை போலீஸ் நிலையத்திற்கு புதிய போலீஸ் இன்ஸ்பெக்டராக கற்பகம் பொறுப்பேற்ற பின் பொது மக்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

வால்பாறை பகுதி பொது மக்கள் போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிப்பதற்காகவோ ஆலோசனை பெறுவதற்காகவோ வரும் போது போலீஸ் அதிகாரிகளின் வருகைக்காக காத்து நின்று சிரமப்படுவதை தவிர்ப்பதற்காக எந்தெந்த புகார்களுக்கு எந்தெந்த போலீஸ் அதிகாரிகளை சந்தித்து புகார் அளிக்கலாம் என்ற விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்ஸ்பெக்டர் கற்பகம் கூறுகையில்:-

புகார் அளிக்க வரக்கூடிய பொது மக்கள் எந்தவித சிரமத்திற்கும் காலவிரயத்திற்கும் ஆளாககூடாது. மேலும் போலீஸ் உயர் அதிகாரிகள் பணிநிமித்தம் வெளியிடங்களுக்கு சென்றால் புகார் அளிக்க வந்தவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற நிலை இனிமேல் இருக்ககூடாது என்பதற்காக அந்தந்த குற்ற விசாரணை குறித்து  அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

இவர்கள் புகார் அளிக்க வந்தவர்களிடம் புகார் மனுக்களை பெற்று தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்.
உயர் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டிய புகார்கள் இருந்தால் அது குறித்து உடனடியாக எனக்கு தகவல் தெரிவிக்கப்படும் உடனடியாக புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்