புதுச்சேரியில் மேலும் 113 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் மேலும் 113 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி, ஆக.
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 629 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 113 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 102 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 195 பேரும், வீடுகளில் 749 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 83 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றைய தினம் உயிரிழப்பு ஏதும் இல்லை.
புதுவையில் உயிரிழப்பு 1.48 சதவீதமாகவும், குணமடைவது 97.75 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 7 பேர், முன்கள பணியாளர்கள் 4 பேர், பொதுமக்கள் 2 ஆயிரத்து 292 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மாநிலத்தில் இதுவரை 7 லட்சத்து 53 ஆயிரத்து 985 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு உள்ளது.