ஆண்டிப்பட்டி அருகே மருத்துவ முகாம்

ஆண்டிப்பட்டி அருகே மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2021-08-13 13:24 GMT
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள நாச்சியார்புரம் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் இளங்கோவன் தலைமை தாங்கினார். தருமத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பாலாஜி அருண் முன்னிலை வகித்தார். இந்த மருத்துவ முகாமில் மகப்பேறு நலம், சர்க்கரை நோய், இதய நோய், புற்றுநோய், கண்புரை நோய், பால்வினை நோய், எலும்பு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிறுநீர், சளி பரிசோதனை, இ.சி.ஜி. மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
முகாமில் நாச்சியார்புரம், ரெங்கசமுத்திரம், ரெங்கநாதபுரம், எஸ்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.


மேலும் செய்திகள்