கோவில் பூசாரி கைது
உடுமலையில் 15 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பூசாரியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். அதே போன்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரும் போக்சோவில் கைதானார்.
உடுமலை
உடுமலையில் 15 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய பூசாரியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். அதே போன்று சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரும் போக்சோவில் கைதானார்.
போக்சோ சட்டம்
உடுமலைபகுதியை சேர்ந்த 17 வயதுள்ள சிறுமி ஒரு மில்லில் வேலை செய்து வந்தார்.அந்த சிறுமி திடீரென்று காணாமல் போனார். இதுகுறித்து அவரது பெற்றோர் உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையொட்டி உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துகாணாமல்போன அந்த சிறுமியை தேடி வந்தனர். விசாரணையில் அந்த மில்லில் வேலைசெய்துவந்த விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஈஸ்வர் வயது 19 என்பவர், திருமணம் செய்வதாக கூறி அந்த சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்தது.
இதைத்தொடர்ந்துபோலீசார், சிறுமி காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை போக்சோ வழக்காக மாற்றி, போக்சோ சட்டத்தில் ஈஸ்வரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஈஸ்வர், கோர்ட்டு உத்திரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
மற்றொரு வழக்கு
கொழுமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் வயது 54.கோவில் பூசாரி. இவர் 15வயது பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாகவும், அதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் உடுமலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அய்யப்பன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோர்ட் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
-