மோட்டார்சைக்கிளில் கடத்திய 1¾ கிலோ கஞ்சா பறிமுதல்

1¾ கிலோ கஞ்சா பறிமுதல்

Update: 2021-08-13 11:54 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி மற்றும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். கோட்டாம்பாளையம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது அந்த வழியாக 4 மோட்டார்சைக்கிளில் வந்த 4 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார்சைக்கிளை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் சந்தேமடைந்த போலீசார் மோட்டார்சைக்கிள்களை சோதனை செய்தனர். அதில் சுமார் 1¾ கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிந்தது. இதையடுத்து கஞ்சா, மோட்டார்சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்