வீட்டின் பின்பக்க கதவை திறந்து 7 பவுன் நகைகள் திருட்டு
7 பவுன் நகைகள் திருட்டு
கலசபாக்கம்
கலசபாக்கம் ஒன்றியம் சி.நம்மியந்தல் ஊராட்சிக்குட்பட்ட கம்பர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முரளி தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகைகளை காணவில்லை. மர்மநபர் யாரோ திருடிச் சென்று விட்டார்.
இதுகுறித்து முரளி கடலாடி போலீசில் புகார் ெசய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.