நவீன தொழில்நுட்பத்தில் மண்பாண்டங்களை உருவாக்கும் மையம் - கலெக்டர் திறந்து வைத்தார்

நவீன தொழில்நுட்பத்தில் மண்பாண்டங்களை உருவாக்கும் மையத்தை கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்தார்.

Update: 2021-08-13 04:29 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெருமுடிவாக்கம் ஊராட்சியில் ரூ.65 லட்சம் மதிப்பில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மண்பாண்டங்களை உருவாக்கும் மையத்தினை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்தார். பின்னர், மண்பாண்ட தொழிலாளர்களின் மேம்பாட்டுக்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மண்பாண்டங்களை உருவாக்கும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கலந்துகொண்டு பயிற்சி முடித்தவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். ்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் மல்லிகா, இந்தியன் ஆயில் தென் மண்டல நிர்வாக இயக்குனர் சாவந்த், கிராம வளர்ச்சி முதன்மைச் செயல்பாட்டாளர் டாக்டர் அபிஜித் தேஷ்பாண்டே, ஊராட்சி மன்ற தலைவர் பாலலட்சுமி வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்