வாடிப்பட்டி அருகே நீரேத்தானில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்ட கையில் வெண்ணெய் ஏந்தியபடி காட்சியளிக்கும் சிறப்புமிக்க நவநீத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டாள் ஜெயந்தி நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. அர்த்த மண்டபத்தில் துளசி தோட்டத்திற்குள் ஆண்டாள் குழந்தையாகவும் அதை பெரியாழ்வார் பார்ப்பது போலவும் காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்னர் பெருமாள் மற்றும் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதன் ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அர்ச்சகர் நவநீத கண்ணன் செய்திருந்தார்.