மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் வாய்மொழி பாட்டம் மூலம் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கக்கேட்டு நாகர்கோவிலில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள், இயக்குனர்கள் பங்கேற்கும் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கட்சி நிர்வாகிகளுடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் வாய்மொழி பாட்டத்தின் அடிப்படையில் பயிர்க்கடன் தருவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது.
ஆனாலும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்ல சுவாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், நிர்வாகிகள் மோகன், செல்லப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவு குறித்து மாவட்ட செயலாளர் செல்லசுவாமி தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக செல்லசுவாமி உள்பட 60 பேர் மீது வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.