உலக யானைகள் தினம் சக்கரேபயலு யானை முகாமில் எளிமையாக கொண்டாட்டம்
சக்கரேபயலு யானை முகாமில் உலக யானைகள் தினம் எளிமையாக கொண்டாடப்பட்டது.
சிவமொக்கா: சக்கரேபயலு யானை முகாமில் உலக யானைகள் தினம் எளிமையாக கொண்டாடப்பட்டது.
சக்கரேபயலு முகாம்
சிவமொக்கா அருகே உள்ள துங்கா அணையின் நீர்தேக்க பகுதியில் அமைந்து உள்ளது சக்கரேபயலு யானைகள் பயிற்சி முகாம். இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த முகாமிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கும்கி யானைகளுடன் சேர்ந்து செல்பி எடுத்து கொள்வார்கள்.
இந்த முகாமில் ஆண்டுதோறும் உலக யானைகள் தினம் கொண்டாடப்படும். அப்போது யானைகள் அலங்கரிக்கப்பட்டு அவைகளுக்கு கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடக்கும்.
இதில் யானைகள் செய்யும் குறும்புத்தனத்தை கண்டுகளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் நேற்று சக்கரேபயலு முகாமில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ஆனால் கொரோனா பரவல் எதிரொலியாக எளிமையாக கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்ள சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் யானைகளுக்கு நடக்கும் விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டது.
அதே நேரம் இதில் பயற்சி முகாமின் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். அப்போது அந்த முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் யானைகளுக்கு வெல்லம், கரும்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் யானைகள் தினத்தை கொண்டாட சக்கரேபயலு முகாமிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
ஆனால் கொரோனாவால் யானைகளுக்கு விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறி அவர்களை வனத்துறையினர் திருப்பி அனுப்பினர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.