ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
நாகர்கோவில்:
நாடு முழுவதும் சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தினவிழா நடக்கிறது. இதையொட்டி அண்ணா விளையாட்டு அரங்கம் சீரமைக்கப்பட்டது. நேற்று முதல் விளையாட்டரங்கில் போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை நடந்து வருகிறது.
மேலும் சுதந்திர தினவிழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட சோதனைச் சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மேலும் ரெயில் தண்டவாளத்தில் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் சோதனை செய்து வருகிறார்கள்.